×

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம், விபத்தை தடுக்கும் 15 புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் உள்ள வி.ஆர்.பிள்ளை தெருவில் புதிய வளைய சுற்றுத்தர அமைப்பை நேற்று, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் முன்னிலை வகித்தார். இதன் தொடர்ச்சியாக, ஆலங்காத்தான் தெரு, தேவராஜ் முதலி தெரு, ஜான் ஜானி கான் தெரு 1, ஜான் ஜானி கான் தெரு 2, தலையாரி தெரு, தெற்கு கூவம் ரோடு, கஜா தெரு, எல்லப்பன் தெரு, சி.பி.எம்.தெரு, காக்ஸ் கொயர், சுவாமி நாயக்கன் தெரு, லாக்நகர் 1, லாக்நகர் 2, பார்த்தசாரதி தெரு ஆகிய பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள 15 கருவிகளையும் பயன்பாட்டிற்கு உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் வந்தார். சேப்பாக்கம்-திருவல்லிக்கேனி சட்டமன்ற தொகுதியில் மொத்தம் இத்தகைய கருவிகள் 108 எண்ணம் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு அவற்றில் இதுவரை 27 எண்ணம் வளைய சுற்றுத்தர கருவிகள் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். …

The post பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம், விபத்தை தடுக்கும் 15 புதிய வளைய சுற்றுத்தர அமைப்பு கருவிகள்: உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Udayanidhi Stalin ,CHENNAI ,V.R.Pillai Street ,Chepakkam-Tiruvallikkeni ,Chepakkam ,
× RELATED செஸ் போட்டிகளில் குகேஷின் வெற்றி...