×

அமிதாப், அனுஷ்கா மீது போலீஸ் நடவடிக்கை

மும்பை: பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், நேற்று முன்தினம் மும்பை நகரில் ஏற்பட்ட கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கினார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரது பைக்கில் லிப்ட் கேட்டு அமர்ந்து சென்றார். படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு சரியான நேரத்தில் செல்வதற்காகவே அவர் அந்த பைக்கில் சென்றார். இதுகுறித்த போட்டோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதுபோல், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா, சாலை தடுப்புகளை கடப்பதற்காக தனது காரில் இருந்து இறங்கினார். அப்போது அந்த வழியாக வந்த ஒருவரது பைக்கில் அமர்ந்து சென்றார். அவரது போட்டோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்நிலையில், அமிதாப் பச்சன் மற்றும் அனுஷ்கா சர்மாவின் போட்டோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் பல்வேறு கமென்டுகளை வெளியிட்டனர். 2 பிரபல நடிகர், நடிகையின் செயல்கள் குறித்தும், அவர்கள் ஹெல்மெட் அணியாதது பற்றியும் அவர்கள் மீது மும்பை போலீஸ் இதுவரை நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அவர்கள் கேள்வி எழுப்பினர். இதையடுத்து மும்பை காவல்துறை வௌியிட்ட டிவிட்டர் பதிவில், ‘ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற இரு பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post அமிதாப், அனுஷ்கா மீது போலீஸ் நடவடிக்கை appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Mumbai ,Bollywood ,Amitabh Bachchan ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED கணவர் யார் என்று தெரிவிக்காத நிலையில்...