×

ரஷ்ய கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கப்பல்கள் மீது அமெரிக்கா விதித்த புதிய தடைகளால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு

வாஷிங்டன்: ரஷ்ய கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கப்பல்கள் மீது அமெரிக்கா விதித்த புதிய தடைகளால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது. ரஷியாவின் கேஸ்ப்ராம் நெஃப்ட், சர்கெட்நெஃப்ட் கேஸ் போன்ற நிறுவனங்கள் மீது புதிய தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிச் செல்லக்கூடிய 183 கப்பல்கள் மீதும் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல்களை நிறுத்தச் செய்ய அதன் வருமான வழிகளை அடைக்க அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. ரஷியாவுக்கு வருமானம் வரும் வழிகளை அடைத்து அந்நாட்டை பணிய வைக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயல்கின்றன. ஏற்கனவே ரஷ்ய கச்சா எண்ணெய்க்கு விலை வரம்பை நிர்ணயித்த மேற்கத்திய நாடுகள், இப்போது புதிய தடை விதித்துள்ளன. ரஷிய எண்ணெய்க்கு பதில் வளைகுடாநாடுகள், அமெரிக்காவிலிருந்து அதிக விலைக்கு இந்தியா எண்ணெய் வாங்கும் நிலை ஏற்படும்.

The post ரஷ்ய கச்சா எண்ணெய் நிறுவனங்கள், கப்பல்கள் மீது அமெரிக்கா விதித்த புதிய தடைகளால் கச்சா எண்ணெய் விலை உயர வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : United States ,Washington ,Russia ,Gazprom Neft ,CirketNFT ,Dinakaran ,
× RELATED சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு...