×

துறையூர் பகுதி சிவன் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு

 

துறையூர், ஜன.12: துறையூர் அருகே பகளவாடி சிவன் கோயிலில் மார்கழி மாதம் சனி பிரதோச வழிபாடு நேற்று மாலை நடைபெற்றது. துறையூர் அருகே நல்லியம்பாளையத்தில்  கைலாசநாதர் கோயில் உள்ளது. அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மகாதீபாராதனை நடைபெற்றது. பிரதோஷ காலத்தின் போது மூலவர் லிங்கத்துக்கு, நந்தியம் பெருமாளுக்கும் உபயதாரர்கள் அளித்த பால், தயிர், பன்னீர், சந்தனம், திரவிய பொடி, பச்சரிசி மாவு, விபூதி, பழ வகைகள், தேன் உள்ளிட்ட பொருள்கள் கொண்டு அபிஷேகமும் ஆராதனையும் நடைபெற்றது. மூலவருக்கு நாகாபரணமும் புது வஸ்திரமும் சாற்றி மகா தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சுவாமி அம்பாள் உற்சவ மூர்த்தி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயிலில் பிரகாரத்தில் உலா எடுத்து செல்லப்பட்டனர். அப்போது சிவ பக்தர்கள் தேவாரம் உள்ளிட்ட திருமுறை பாடல்களை பாடி சிவ வாத்தியக் கருவிகளை வாசித்துக் கொண்டு சென்றனர். சுற்றுப்புற பகுதி மக்கள் பிரதோஷ காலத்தில் பங்கேற்று கோயிலில் பிரகாரத்தில் இடமும், வலமுமாக சுற்றி. வழிபாடு செய்தனர். சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் துறையூர் சிவன் கோயில், பகளவாடி சத்திரம், ரெட்டியாப்பட்டி, கொப்பம்பட்டி, எரகுடி, முருகூர், கீரம்பூர் உள்ளிட்ட கிராமப்புற சிவன் கோயில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

The post துறையூர் பகுதி சிவன் கோயிலில் சனி பிரதோஷ வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Shani ,Shiva temple ,Thuraiyur ,Shani Pradosha ,Margazhi month ,Pagalavadi Shiva temple ,Kailasanathar ,Nalliyampalayam ,Pradosha ,
× RELATED கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்