×

நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம்

 

நாகப்பட்டினம், ஜன.12: நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் நாகப்பட்டினத்தில் நடந்தது. தலைவர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மைதிலி கிருஷ்ணன் வரவேற்றார். தலைமை நிலைய செயலாளர் கோபாலசாமி ஆண்டறிக்கை வாசித்தார். கூட்டத்தில், ஒன்றிய அரசு வழங்குவது போல் மாநில அரசும் ரூ.1000 மருத்துவப்படி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மூத்தகுடிமக்களுக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பண்டிகை கால முன்பணம் ரூ.4 ஆயிரம் வழங்கி அதை அவர்களின் ஓய்வூதியத்தில் இருந்து மாதம் ரூ.400 வீதம் பிடித்து கொள்ள வேண்டும். 70 வயது நிரம்பிய மூத்த குடிமக்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ. 2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அமைப்பு செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

The post நாகப்பட்டினம் மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam District Retired Officers Association Meeting ,Nagapattinam ,Kaliyamoorthy ,Vice Chairman ,Maithili Krishnan ,Head ,Gopalasamy ,Union Government ,Dinakaran ,
× RELATED தண்டவாளத்தில் திடீர் விரிசல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தப்பியது