×

தெலுங்குக்கு சென்றார் அபர்ணா தாஸ்

சென்னை: தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்தவர் அபர்ணா தாஸ். கவின் ஜோடியாக டாடா படத்தில் ஹீரோயினாக நடித்தார். இதையடுத்து இப்போது மலையாளத்தில் சீக்ரெட் ஹோம் என்ற படத்தில் நடித்து வருகிறார். டாடா படத்தில் இவரது நடிப்பு பேசப்பட்டது. இந்நிலையில் அபர்ணா தாஸ், தெலுங்கில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். பஞ்சா வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக நடிக்கும் படத்தை ஸ்ரீகாந்த் என்.ரெட்டி இயக்குகிறார். படத்தில் பஞ்சா வைஷ்ணவ் தேஜுக்கு ஜோடியாக அபர்ணா தாஸ், ஸ்ரீலீலா ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தில் முக்கிய வேடத்தில் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடிக்க உள்ளார். நாக வம்சி, சாய் சொய்ஜன்னா தயாரிக்கிறார்கள்.

படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் அபர்ணா தாஸுக்கு நடிக்க அதிகம் வாய்ப்பு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. ஸ்ரீலீலா கவர்ச்சியான கேரக்டரில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி அபர்ணா தாஸ் கூறும்போது, ‘ஒரே நாளில் ஹீரோயினாக நான் வாய்ப்பு பெற்று வந்துவிடவில்லை. சிறு சிறு வேடங்களில் நடித்த பிறகுதான் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. பீஸ்ட் படம் எனக்கு மக்களிடம் பிரபலப்படுத்தியது. டாடா படம் எனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியது. இந்த இரு படங்களையும் மறக்க முடியாது. மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கிலும் நடிக்கப்போவது மகிழ்ச்சியாக உள்ளது. எல்லா மொழிகளிலும் கவனம் செலுத்தவே விரும்புகிறேன்’ என்றார்.

The post தெலுங்குக்கு சென்றார் அபர்ணா தாஸ் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : abarna das ,das ,Tata ,Gavin ,Aberna ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED டாடா நெக்சான் பேஸ்லிப்ட் கார்கள்