×

ரூ.4 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணை: குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியாகிறது

புதுடெல்லி: இந்தியாவின் டிஆர்டிஓ மற்றும் ரஷ்யாவின் என்பிஓ மெஷினோஸ்ட்ரோயேனியா ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. அதிவேகமாக சென்று இலக்குகளை தாக்கும் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்குவதற்கு இந்தோனேசியா நாடு விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்காக 450 மில்லியன் டாலர்(ரூ.4000 கோடி) ஒப்பந்தத்தை இந்தியாவுடன் இந்தோனேசியா மேற்கொள்ளவிருக்கிறது. இதற்கான அறிவிப்பு குடியரசு தினத்தன்று வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post ரூ.4 ஆயிரம் கோடிக்கு ஏற்றுமதி இந்தோனேசியாவுக்கு பிரம்மோஸ் ஏவுகணை: குடியரசு தினத்தன்று அறிவிப்பு வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Indonesia ,Republic Day ,New Delhi ,India ,DRDO ,Russia ,Mashinostroeniya ,Dinakaran ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...