×

நெல்லையப்பர் கோயில் யானைக்கு உடல் நலக்குறைவு

நெல்லை: நெல்லையில் உள்ள நெல்லையப்பர் -காந்திமதி அம்மன் கோயிலில் உள்ள காந்திமதி யானைக்கு 56 வயது ஆகிறது. இந்நிலையில் அதிக எடை காரணமாக காந்திமதி யானையால் நிற்க முடியாமல் நேற்று முன்தினம் இரவில் இருந்து படுத்தே கிடக்கிறது. உணவும் உட்கொள்ளவில்லை. மருத்துவர்கள் ஆலோசனைப்படி 2 கிரேன்கள் வரவழைக்கப்பட்டு யானைக்கு பெல்ட் அணிவித்து தூக்கி நிறுத்தப்பட்டது. எனினும் 5 நிமிடங்கள் மட்டுமே அதனால் நிற்க முடிந்தது. மீண்டும் படுத்துக்கொண்டது. மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

 

The post நெல்லையப்பர் கோயில் யானைக்கு உடல் நலக்குறைவு appeared first on Dinakaran.

Tags : Nellaiappar temple ,Nellai ,Gandhimati ,Nellaiappar-Kandimathi Amman temple ,
× RELATED நெல்லையப்பர் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்