×

யுஜிசி அறிவிப்பை திரும்பபெறக்கோரி கும்பகோணம் அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

 

கும்பகோணம், ஜன.11: கும்பகோணத்தில் அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கத்தினர், ஒன்றிய அரசின் யுஜிசி அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தி் பழமைவாய்ந்த அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரி நுழைவு வாயில் முன்பு நேற்று இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக ஒன்றிய அரசின் மாநில உரிமையை பறிக்கும் வகையில் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை ஆளுநரே அமைப்பார் என்ற யுஜிசி அறிக்கையை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் கிளை செயலாளர் கோபிநாத் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள்
எழுப்பினர்.

The post யுஜிசி அறிவிப்பை திரும்பபெறக்கோரி கும்பகோணம் அரசு கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Indian Students Union ,Kumbakonam Government College ,UGC ,Kumbakonam ,Union government ,Kumbakonam, Thanjavur district ,Dinakaran ,
× RELATED யுஜிசி வரைவு விதிகளை எதிர்த்து கேரளத்தில் மாநாடு..!!