- சாத்தான்குளம் பள்ளி
- சதங்குளம்
- மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலகம்
- சாதன்குளம் வட்டம் சட்ட பணிக்குழு
- சாத்தன்குளம் தூய கார்டியாக் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி
- அந்தோணி மெல்பின்
- விழிப்புணர்வு
- தின மலர்
சாத்தான்குளம், ஜன. 11: சாத்தான்குளம் தூய இருதய ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் மற்றும் சாத்தான்குளம் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் அந்தோணி மெல்பின் தலைமை வகித்தார். நிகழ்ச்சிகளை ஆசிரியர் சித்திரைச் செல்வன் தொகுத்து வழங்கினார். இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் பிளாரன்ஸ், சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் ஜெயந்தி, முதல் நிலை காவல் காவலர் பூமணி ஆகியோர் சட்டம் குறித்து பேசினர். இதில் உதவி தலைமை ஆசிரியர் பிளஸ்ஸி, ஆசிரியர்கள் பிளார்மின், ஜெகன்அந்தோணி, வட்ட சட்டப் பணிக்குழு நிர்வாகிகள் கஸ்தூரி, பெல்சி, மலர்விழி உள்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
The post சாத்தான்குளம் பள்ளியில் சட்ட விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.
