- நாசரேத்
- கந்தசாமிபுரம்
- நியாயமான
- விலை கடை
- நாசரேத் டவுன் பஞ்சாயத்து
- டவுன் பஞ்சாயத்து
- தலைவர்
- நிர்மலா ரவி
- துணை
- அருண்…
- தின மலர்
நாசரேத், ஜன. 11: நாசரேத் பேரூராட்சிக்குட்பட்ட கந்தசாமிபுரம் நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவி நிர்மலா ரவி தலைமை வகித்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். பேரூராட்சி துணை தலைவர் அருண் சாமுவேல், பேரூராட்சி முன்னாள் தலைவர் ரவி செல்வகுமார், முன்னாள் பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி தலைவர் ஜெயசிங், கவுன்சிலர்கள் சாமுவேல், அதிசயமணி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் சுரேஷ், கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் கோவில்பட்டி ஆழ்வார் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை நகராட்சி சேர்மன் கருணாநிதி பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார். சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன், நகராட்சி கவுன்சிலர் உலகராணி தாமோதரன், ரேஷன் கடை விற்பனையாளர் ராஜேஸ்வரி மற்றும் ரவிச்சந்திரன், நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.