×

பருவமழை, பெஞ்சல் புயலால் 265 ஹெக்டேர் நெற்பயிர் சேதம் ₹45 லட்சம் இழப்பீடு கேட்டு அறிக்கை வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஜன.11: வடகிழக்கு பருவமழை, பெஞ்சல் புயலால் 265 ஹெக்டேர் நெற்பயிர் சேதத்திற்கு இழப்பீடாக ₹45 லட்சம் கேடடு அரசு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர். பெஞ்சல் புயலால் பேய் மழையினால், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், வேலூர் மாவட்டத்தில் கனமழையின் காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் காட்பாடி, பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு உள்ளிட்ட சில பகுதிகளில் 253 விவசாயிகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 159.19 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்தள்ளது. அதேபோல், வடகிழக்கு பருவமழையால் வேலூர் மாவட்டத்தில் 199 விவசாயிகள் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த 106.01 ஹெக்டேர் நெற்பயிர்கள் சேதமடைந்தது. வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, பெஞ்சால் புயலால் 452 விவசாயிகளின் 265 ஹெக்டேர் நெற்பயிருக்கு இழப்பீடாக ₹45 லட்சம் கேட்டு தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பருவமழை, பெஞ்சல் புயலால் 265 ஹெக்டேர் நெற்பயிர் சேதம் ₹45 லட்சம் இழப்பீடு கேட்டு அறிக்கை வேலூர் மாவட்டத்தில் appeared first on Dinakaran.

Tags : Vellore ,Benjal ,Bengal ,Cuddalore ,Puducherry ,Tiruvannamalai ,Ranipettai ,Benzel ,Dinakaran ,
× RELATED ெசங்கல் லோடு லாரி பழுதாகி நின்றதால்...