×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கோவை வந்த ரயிலில் ரூ.30 லட்சம் சிக்கியது ஹவாலா பணமா? : வாலிபரிடம் விசாரணை

கோவை: ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து கோவை வழியாக கேரள மாநிலம் ஆலப்புழாவுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. இந்த ரயில் நேற்று முன்தினம் இரவு திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தது. அங்கு ஒவ்வொரு பெட்டியாக ஏறி ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். ஒரு பெட்டியில் சந்தேகத்திற்கிடமாக இருந்த வாலிபரை  பிடித்து அவரது பையை சோதனை செய்தபோது அதில் ரூ 30 லட்சம் பணம் இருந்தது. பின்னர் கோவை ரயில்வே போலீசாரிடம் அவரை ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த லால்சிங் ராவ் (19)என்பதும், சென்னையில் இருந்து ரயில் ஏறியதும் தெரியவந்தது. அவர் கோவைக்கு தங்க நகை வாங்க வந்ததாக தெரிவித்துள்ளார். பின்னர் ரேஸ்கோர்சில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளிடம் அந்த வாலிபர் ஒப்படைக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்….

The post ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து கோவை வந்த ரயிலில் ரூ.30 லட்சம் சிக்கியது ஹவாலா பணமா? : வாலிபரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Jharkhand ,Gov ,Govay ,Jharkhand State ,Thanbat ,Kerala State ,Alapuzhala ,Gov. ,Dinakaran ,
× RELATED ஈமக்கிரியை நிகழ்ச்சி: ஜார்க்கண்ட்...