×

குடியரசு தின அணிவகுப்பை காண சிறப்பு விருந்தினர்களாக 10,000 சாதனையாளர்கள்: ஒன்றிய அரசு அழைப்பு

புதுடெல்லி: நாட்டின் 76வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, டெல்லி கடமை பாதையில் பிரமாண்ட குடியரசு தின விழா அணிவகுப்பு நடத்தப்படும். இந்த அணிவகுப்பை நேரில் காண, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த சாமானியர்கள் 10,000 பேரை சிறப்பு விருந்தினர்களாக ஒன்றிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விழாக்களில் பொதுமக்களின் பங்கேற்பை அதிகரிக்கும் நோக்கத்துடன், குடியரசு தின அணிவகுப்பை காண 10,000 சிறப்பு விருந்தினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.

இதில், பாராலிம்பிக் பங்கேற்பாளர்கள், செஸ் ஒலிம்பியாட் பதக்கம் வென்றவர்கள், சிறந்த கிராமதலைவர்கள், கைவினை கலைஞர்கள், பேரிடர் நிவாரணப் பணியாளர்கள், சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனர்கள், சாலை கட்டுமானத் தொழிலாளர்கள் என 31 துறைகளில் சாதனை படைத்தவர்களும், பொன்னான இந்தியாவை உருவாக்க பங்களிப்பை அளித்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், அணிவகுப்பை காண்பதோடு, தேசிய போர் நினைவுச்சின்னம், பிரதமர் சங்கராலயம் மற்றும் டெல்லியில் உள்ள பிற முக்கிய இடங்களையும் பார்வையிடுவார்கள். மேலும் பல்வேறு அமைச்சர்களுடன் உரையாடும் வாய்ப்பையும் பெறுவார்கள்’ என கூறப்பட்டுள்ளது.

The post குடியரசு தின அணிவகுப்பை காண சிறப்பு விருந்தினர்களாக 10,000 சாதனையாளர்கள்: ஒன்றிய அரசு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Union government ,Republic Day parade ,New Delhi ,Republic Day ,Delhi's Dutt Path ,Dinakaran ,
× RELATED டெல்லியில் சைபர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 8 பேரை கைது செய்தது போலீஸ்!