- குந்தாஸ்
- திண்டுக்கல்
- பாலமுருகன்
- சின்னாளபட்டி தென்றல் நகர்
- தாலுகா போலீஸ்
- பொன்மாந்துறை காவல் நிலையம்
- திண்டிகுல்...
- தின மலர்
திண்டுக்கல், ஜன. 8: சின்னாளப்பட்டி தென்றல் நகரை சேர்ந்தவர் பாலமுருகன்(39), நிதி நிறுவன ஊழியர். கடந்த ஆண்டு டிச.9ம் தேதி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல்லை அடுத்த பொன்மாந்துறை முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜஸ்டின் ராஜா(27), பேகம்பூர் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த லியோ சார்லஸ்(32), கொடைரோடு அம்மாபட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்(28) உள்பட 7 பேரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் ஜஸ்டின் ராஜா உள்பட 3 பேர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்கும்படி கலெக்டர் பூங்கொடிக்கு போலீஸ் சூப்பிரண்ட் பிரதீப் பரிந்துரை செய்தார். அதன் பேரில் ஜஸ்டின் ராஜா உள்பட 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த 3 பேரையும், தாலுகா போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
The post கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.