×

ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரிவு உபசார விழா

 

திருத்துறைப்பூண்டி, ஜன.6: ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் நிலையில்,அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஒன்றிணைந்து பிரிவு உபசார விழா நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களின் பதவிக்காலம் (நேற்று) 5ம் தேதி முடிவடைந்த நிலையில், அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் ஒன்றிணைந்து பிரிவு உபச்சார விழா, உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகர் தலைமையிலும், ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம் முன்னிலையிலுமநடைபெற்றது.
ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர்,வட்டார வளர்ச்சி அலுவலர் தெய்வநாயகி கலந்துகொண்டனர்.வருகை தந்த அனைவருக்கும் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி விடைபெற்றனர். தமது 5ஆண்டுகால பணிக்காலத்தில் ஏற்பட்ட அனுபவங்களையும், செய்து முடித்த பணி களையும்ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் எடுத்துரைத்தார். இக்கூட்டத்தில் அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அனைத்து நிலை அலுவலர்கள், ஊராட்சி பணியாளர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரிவு உபசார விழா appeared first on Dinakaran.

Tags : Panchayat Presidents' Divisional Reception Ceremony ,Thiruthuraipoondi ,Panchayat ,Presidents ,Thiruthuraipoondi Panchayat Union, Thiruvarur District… ,Dinakaran ,
× RELATED வருகிற 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை...