×

வருசநாடு மலைச்சாலையில் கடும் பனி மூட்டம்

வருசநாடு, ஜன.6: வருசநாடு மலைச்சாலைகளில் காலை வரை மூடுபனி நீடித்திருப்பதால் பயணிகள், வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் தமிழக கேரள மாநிலத்தை இணைக்கும் குமுளி, போடிமெட்டு, கம்பமெட்டு மலைச் சாலைகள் உள்ளன.

மேலும் தேனி, விருதுநகர், மதுரை மாவட்டங்களை இணைக்கும் வருசநாடு மலைச்சாலையும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ளது. இந்த நிலையில், வருசநாடு மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு தொடங்கி காலை வரை பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.குறிப்பாக மலைச்சாலைகளில் காலையில் வெகுநேரம் வரை சாலை தெரியாதபடி மூடுபனி சூழ்ந்திருக்கிறது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றன.

The post வருசநாடு மலைச்சாலையில் கடும் பனி மூட்டம் appeared first on Dinakaran.

Tags : Varusanadu mountain road ,Varusanadu ,Theni district ,Western Ghats ,Kumuli ,Podimettu ,Kambemtu ,Tamil Nadu ,Kerala.… ,Dinakaran ,
× RELATED கடமலைக்குண்டு அருகே 14 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கியவர் கைது