×

கந்தர்வகோட்டை அருகே அம்மா புதுப்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா

 

கந்தர்வகோட்டை, ஜன. 5: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம், சுந்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த அம்மா புதுப்பட்டி கிராமத்தில் புதிய பகுதிநேர நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவிற்கு வட்ட வழங்க அலுவலர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தார்.இந்த பகுதி நேர நியாய விலை கடை மூலம பெருச்சி வன்னியம்பட்டி ,அம்மா புதுப்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 200 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள். திறப்பு விழா நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர் அழகர் முத்து, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதி பிரியா, கந்தர்வகோட்டை ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் செல்வி வைரக்கண்ணன், ராமராசு, மகாலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post கந்தர்வகோட்டை அருகே அம்மா புதுப்பட்டியில் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா appeared first on Dinakaran.

Tags : Amma Pudhupatti ,Kandarvakottai ,Amma Pudhupatti village ,Sundhampatti ,Pudukkottai district ,Balakrishnan ,time ,
× RELATED கந்தர்வக்கோட்டையில் ஆட்சி மொழி திட்ட விளக்க கூட்டம்