×

செமப்புதூர், புங்கவர்நத்தத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம்

எட்டயபுரம், ஜன.5: கயத்தார் ஊராட்சி ஒன்றியம் புங்கவர்நத்தம், கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் செமப்புதூர் ஆகிய கிராமங்களில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் தலா ₹9.45 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டிடங்களின் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரான மார்க்கண்டேயன் எம்எல்ஏ, புதிய ரேஷன் கடை கட்டிடங்களை திறந்துவைத்தார். நிகழ்ச்சிகளில் ஒன்றியச் செயலாளர் கோவில்பட்டி கிழக்கு நவநீதக்கண்ணன், விளாத்திகுளம் மேற்கு அன்புராஜன் கோவில்பட்டி யூனியன் சேர்மன் கஸ்தூரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தங்கமாரியம்மாள், கயத்தாறு யூனியன் பிடிஓக்கள் ஆனந்த சுப்புலட்சுமி, பாண்டியராஜன், எட்டயபுரம் பேரூர் துணைச் செயலாளர் மாரியப்பன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உள்ளிட்ட நிர்வாகிகள், அரசுத்துறை அலுவலர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post செமப்புதூர், புங்கவர்நத்தத்தில் புதிய ரேஷன் கடை கட்டிடம் appeared first on Dinakaran.

Tags : Semappudur, Pungavarnatham ,Ettayapuram ,Gayathar Panchayat Union Pungavarnatham ,Kovilpatti ,Panchayat Union ,Semappudur.… ,
× RELATED அமமுக மாஜி நிர்வாகி கழுத்து நெரித்து கொலை: பிரபல ரவுடி கைது