×

மாஜி ஒன்றிய அமைச்சர் முன்னிலையில் தாமரை கட்சியில் ரவுடியின் மனைவி இணைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘இருக்கிற பிரச்னை போதாது என்று சொந்த மாவட்டத்திலும் பிரச்னையா என்று சேலம் விவிஐபி தலையில் அடித்து கொண்டாராமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘தமிழக மாஜி விவிஐபியின் சொந்த மாவட்டத்துல, இலைக்கட்சிக்குள்ளேயே கோஷ்டி பூசலும், குழப்பமும் அதிகமாகிட்டே போகுதாம். விசாரித்தால், உள்ளாட்சி நகர்புர தேர்தல் தானாம். மாங்கனி கார்ப்பரேஷன்ல இருக்குற 60 வார்டுக்கும் தன்னோட ஆதரவாளருங்கள மட்டுமே நிறுத்த ‘மாவட்டம்’ பிளான் போட்டுட்டு வர்றாரு. ஆனா, அவரைவிட சவுத் தொகுதியோட இலை கட்சியின் மக்கள் பிரதிநிதி கைதான் ஓங்கி இருக்குறதாம். இதனால அவர்கிட்டயும் சீட் கேட்டு பல நிர்வாகிங்க காய் நகர்த்திட்டு வர்றாங்க. இரண்டு தரப்பும் ஆளுக்கொரு லிஸ்ட் தயார் செஞ்சு, கட்சி நிர்வாகிங்ககிட்ட பேசி, உனக்குதான் சீட் என்று சொல்றாங்களாம். மேலும், விவிஐபியையும் அடிக்கடி சந்திச்சு தங்களோட லிஸ்ட்டுதான் பெஸ்ட்னு காட்டி இதை அப்படியே அறிவித்தால் நன்றாக இருக்கும்னு சொல்றாங்க. இதுல யார் கை ஓங்கும்னு என்பது தான் தொண்டர்களிடம் விவாத பொருளாக மாறி இருக்காம். இப்ப இந்த ரெண்டு பேர சுத்தியும், தனித்தனி கோஷ்டியா நிர்வாகிங்க வட்டமடிச்சுக்கிட்டு இருக்காங்க. இதை பார்த்த மாஜி விவிஐபி கட்சி தலைமையில தான் குழப்பம்னு நினைச்சா… அது நம்ம மாவட்டத்தையும் விட்டு வைக்கல போல என்று கூறி தலையில் அடித்து கொள்வதாக, அடிபொடிகள் மத்தியில் பேச்சு ஓடுதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரைக்கும் ரவுடிகளுக்கும் அப்படி என்ன அன்யோன்யம்…’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாஜி ஒன்றிய மந்திரியான தங்கமானவர் முன்னிலையில் மாற்று கட்சியினர் தாமரையில் இணையும் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்குது. இதில் பிரபல ரவுடிகள் இணைவது அவ்வப்போது அவரது கட்சியில் இணைவதும், அவர்கள் குறித்து பெரிய அளவில் பரபரப்பாக பேசப்படுவதும் சாதாரண நிகழ்வாக மாறி போச்சு. நாகர்கோவிலில் தேரூர் இரட்டை கொலை உட்பட பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய குமரி மாவட்டத்தைசேர்ந்த பிரபல ரவுடி ஒருவர் தங்கமானவர் முன்னிலையில் தாமரை கட்சியில் இணைந்ததும், அந்த ரவுடிக்கு மாஜி மந்திரி ஆளுயர மாலை அணிவித்தும் அந்த கட்சியில் இருந்த பலருக்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம். அது பழைய கதை. ஆனால், சமீபத்தில் செங்கல்பட்டில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டாங்க. அந்த இடத்தில் இருந்த ரத்த கறை கூட இன்னும் காயவில்லை. அதற்குள் அந்த ரவுடிகளை கொன்ற இரண்டு வாலிபர்களை போலீசார் என்கவுன்டரில் போட்டு தள்ளினாங்க. இது தமிழக அளவில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுல அதிர்ச்சியான தகவலே, என்கவுன்டர் செய்யப்பட்ட வாலிபர்களின் தலைவனை போலீசார் தேடி வர்றாங்க. சிக்கினால் என்கவுன்டரில் இருந்து தப்ப முடியாது என்று நினைத்த ரவுடி தலைவன், தன் மனைவியை தாமரை கட்சியில் இணைய சொல்லி ஸ்கெட்ச் போட்டு கொடுத்தாராம். தாமரையில் இணைந்தால் அரசியல் பாதுகாப்பு கிடைக்கும்.போலீஸ் தங்களை நெருங்காது என்பது ரவுடி தலைவனின் திட்டமாம். இதனால கடந்த சில நாட்களுக்கு முன்பாக, தங்கமானவர் தலைமையில் நடந்த நிகழ்வில் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி தலைவியின் மனைவியான ஆங்கிலத்தில் பார்டர் என்ற பெயரை கொண்டவரை காக்கிகள் 10 மணிநேரம் வைத்து விசாரணை செய்தாங்களாம். ரவுடி தலைவனுக்கு பல விஷயங்களில் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது அந்த பார்டர் மனைவிதானாம். கட்சியில் சேர்ந்த சில நாளிலேயே பார்டர் லேடியை விசாரணைக்கு காக்கிகள் அழைத்து சென்ற சம்பவம் தாமரை வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்காம். ரவுடிகளை கட்சியில் சேர்த்தால் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகும் என்பது கட்சி தலைமைக்கு தெரியாதா என்று அடிமட்ட தொண்டர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘இலை இருக்கு… உறுப்பினர் அட்டை இருக்கு ஆனால் தேர்தலில் போட்டியிட ஆள் இல்லையே என்று கதறும் சத்தம் எங்கிருந்து கேட்கிறது…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.‘‘திருக்கோவிலூர் நகரம், பேரூராட்சியாக இருந்து தற்போது நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 28 வார்டுகளைக் கொண்ட இந்த நகராட்சியில் இலை கட்சியில் போட்டியிடுவதற்கு ஆளில்லாமல் தவித்து வருகிறார்களாம். தோல்வி நினைப்பில் ஒவ்வொருவராக குக்கர் கட்சிக்கு மறைமுகமாக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனராம். இந்த நகரத்து செயலாளர், ஆள் கிடைக்காத விரக்தியில் குக்கர் கட்சிக்கு சென்றவர்களை மீண்டும் இலை கட்சிக்கு அழைக்கிறாராம். நீங்கதான் கவுன்சிலர், உங்களுக்குதான் சீட்டு என்று ஓட்டம் பிடித்தவர்களிடம் மன்றாடி வருகிறாராம். ஆனால் நிர்வாகிகளோ நான் இலை கட்சிதான் பயப்படாதீங்க என ஆறுதல் சொன்னாலும், ஒருத்தரும் உறுதியாக கூறவில்லையாம். இதனால் கோவிலூர் நகரில் இலை கட்சியில் நகர்புற தேர்தலை எப்படி சந்திப்பது என தவித்து வருகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.      …

The post மாஜி ஒன்றிய அமைச்சர் முன்னிலையில் தாமரை கட்சியில் ரவுடியின் மனைவி இணைந்த கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Rowdy ,Salem ,VVIP ,Lotus ,Party ,Union ,Minister ,Yananda ,
× RELATED மராட்டியத்தில் நடந்த பிரச்சாரக்...