×

ரூ.7 லட்சம் செலவு செய்து நாய்க்கு பிறந்த நாள் விழா: குஜராத் பணக்காரர் ஆடம்பரம்

அகமதாபாத்: குஐராத்தில் வளர்ப்பு நாய்க்கு ஆடல், பாடலுடன் மிக பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் நிபோல் பகுதியை சேர்ந்தவர் சிராக். இவரது குடும்பத்தினர் ‘அப்பி’ என்ற பெயரில் நாய் வளர்க்கின்றனர். இந்நிலையில் அப்பிக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இந்த பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவதற்கு குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து, மிகப்பெரிய பார்ட்டி ஹாலை ஏற்பாடு செய்தனர். உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆடல் பாடல், இசை நிகழ்ச்சியுடன் மிக பிரமாண்டமாக கேக் வெட்டி, அப்பியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதன்மூலம், இந்த விழாவில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படாமல் அதிகம் பேர் கூடியிருப்பது தெரிந்தது. இதை பார்த்த அதிகாரிகள், வழக்குப் பதிவு செய்து சிராக் உட்பட 3 பேரை கைது செய்துள்ளனர்….

The post ரூ.7 லட்சம் செலவு செய்து நாய்க்கு பிறந்த நாள் விழா: குஜராத் பணக்காரர் ஆடம்பரம் appeared first on Dinakaran.

Tags : Gujarat ,AHMEDABAD ,Kairat ,Nibol ,Ahmedabad, Gujarat ,
× RELATED குஜராத்தில் கூரியர் பார்சல்களில் ரூ.1.12 கோடி கஞ்சா பறிமுதல்