- விடுதி பணியாளர்கள் சங்க கூட்டம்
- சிவகங்கை
- தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர் சங்க மாவட்ட கூட்டம்
- ஆறுமுகம்
- மாவட்ட செயலாளர்
- ராம்பிரபு
- பொருளாளர்
- சுரேஷ்
- தின மலர்
சிவகங்கை, ஜன.1:சிவகங்கையில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கல்வி விடுதி பணியாளர் சங்க மாவட்ட கூட்டம் நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராம்பிரபு, பொருளாளர் சுரேஷ், துணைத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
விடுதியில் பணிபுரியும் சமையலர்கள், காவலர்களுக்கு பணிமூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கி அலுவலக உதவியாளர் பணியிடம் வழங்க வேண்டும். விடுதி தூண்மை பணியாளர்களுக்கு பணிப்பதிவேடு பதிவு செய்ய வேண்டும். பணியாளர்களை சொந்த தாலுகாவில் பணியமர்த்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
The post விடுதி பணியாளர் சங்க கூட்டம் appeared first on Dinakaran.
