×

தொழில்முனைவோர் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி

சென்னை: தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி வழங்கப்படும். தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் “யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் தொடர்பான பயிற்சியானது வரும் 09.01.2025 முதல் 11.01.2025 வரை மூன்று நாட்கள் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் மாவட்டத் தொழில் மையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ளது.

“சொந்தமாக YouTube சேனலை உருவாக்குதல், வீடியோ மற்றும் ஸ்லைடு ஷோ உருவாக்கம், சமூக ஊடக சந்தைப்படுத்தல், சமூக ஊடகங்களை இணைத்தல், வாடிக்கையாளர் வலையமைப்பை எவ்வாறு அதிகரிப்பது, பயனுள்ள சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்பு ஆன்லைன் மார்க்கெட்டிங் டொமைன் பெயர் & ஹோஸ்டிங் இணையதள வடிவமைப்பு நுட்பங்கள்,சைபர் குற்றம் பாலிசி மற்றும் விதிகள் ஆகிய தலைப்புகளின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஆர்வமுள்ளவர்கள் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேற்பட்ட, குறைந்தப்பட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், இப் பயிற்சிப் பற்றிய விவரங்களை அறிய / பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.

அலுவலக வேலை நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.9080130299, 9080609808,9841693060 முகவரி தொலைபேசி கொடுக்கப்பட்டுள்ளது. District Programme Manager District Industrial Villupuram District Centre Conference Hall, Villupuram District; Entrepreneurship Development and Innovation Institute, Guindy, Chennai 600 032 ஆகிய இடங்களில் பயிற்சி தொடங்கவுள்ளது. முன்பதிவு அவசியம் என்றும் பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

The post தொழில்முனைவோர் யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி appeared first on Dinakaran.

Tags : YouTube ,Chennai ,Government of Tamil Nadu ,Entrepreneurship Development and Innovation Institute ,
× RELATED தமிழை விமர்சனம் செய்தாரா? சங்கீதாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்