×

இருளர் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு

மதுராந்தகம்: மதுராந்தகம் செங்குந்தர் பேட்டை பொன்னியம்மன் குட்டைக்கரையைச் சேர்ந்த இருளர் இன மக்கள் சுமார் 70 ஆண்டுகளாக அப்பகுதியில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இருளர் இன மக்கள் பகுதியில் சாலை வசதி இல்லாததால் தனியாருக்கு சொந்தமான நிலத்தின் பாதையை பயன்படுத்தி வந்தனர். மேலும் இருளர் இன பகுதிக்கான குடிநீர் குழாய் பாதையும் அந்த வழியாகத்தான் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்த சாலையை தனிநபர்கள் மறித்து வருகிறார்கள். காம்பவுண்ட் சுவர் அமைக்க ஆயத்த வேலைகளும் நடைபெற்று வருகிறது.

இதில், எங்களை இந்த பாதை வழியாக வரக்கூடாது என மிரட்டுகிறார்கள், நகராட்சிக்கு சொந்தமான சாலை மற்றும் மழைநீர் வடிகால் செல்லும் இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள், இதுகுறித்து மதுராந்தகம் கோட்டாட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து பாதையையும், குடிநீர் இணைப்பையும் மீட்டு தர வேண்டும் என்று கோரி அப்பகுதி இருளர் மக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.  அப்போது வன்கொடுமை தடுப்பு மற்றும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு விழிப்பு குழு உறுப்பினர் பிரபாகரன், திமுக கவுன்சிலர் சசிகுமார், சமூக ஆர்வலர் ஆனந்தன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

The post இருளர் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Kottaakshiyar ,Irular ,Madhurantakam ,Sengundharpet ,Ponniyamman Kuttaikkarai ,Dinakaran ,
× RELATED இருளர் குடியிருப்பு பகுதிக்கு சாலை வசதி கேட்டு கோட்டாட்சியரிடம் மனு