உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த திருப்புலிவனம் கிராமத்தில் இயங்கி வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுகாதாரத்துறை சார்பில் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் வரவேற்றார்.
மாவட்ட புகையிலை ஆலோசகர் மருத்துவர் ஸ்ரீராம் சிறப்புரையாற்றினர். இதில் புகையிலை பயன்படுவத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், வாய் புற்றுநோயின் அறிகுறிகள், அவற்றை தடுக்கும் முறைகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் புகையிலை எதிர்ப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் சுகுமார், சுகாதார ஆய்வாளர்கள் லோகநாதன், சந்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post உத்திரமேரூர் அருகே புகையிலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு appeared first on Dinakaran.