×

விருதுநகரில் பாம்புகள் படையெடுப்பு-குடியிருப்புவாசிகள் அச்சம்

விருதுநகர் : விருதுநகர் பாவாலி ரோட்டில் துணைமின்நிலையம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்புகள் உள்ளன. ஊழியர் குடியிருப்பு இடிந்து விழும் நிலையால் வீடுகள் மூடி கிடக்கின்றன. துணைமின்நிலைய பின்பகுதியில் பர்மா காலனியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. துணைமின்நிலைய வளாகத்தின் பின்புற சுற்றுச்சுவர் மழையால் 75 அடி தூரத்திற்கு இடிந்து துணைமின்நிலைய வளாகத்திற்குள் விழுந்து கிடக்கிறது. மின்நிலைய வளாகத்தின் உள்பகுதி புதர் மண்டி கிடப்பதால், அவற்றில் வசிக்கும் பாம்புகள் பின்பகுதியில் உள்ள பர்மா காலனி குடியிருப்புகளுக்குள் வந்து விடுகிறது. கடந்த 3 நாட்களில் இருவரை பாம்புகள் கடித்துள்ளன. துணை மின்நிலைய வளாகத்தில் உள்ள புதர்களை அகற்றி, சுற்றுச்சுவரை விரைந்து கட்ட வேண்டுமென பர்மா காலனி மக்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில்,` துணைமின்நிலைய சுற்றுச்சுவர் இடிந்து உள்பகுதியில் விழுந்து கிடக்கிறது. இடிந்த பகுதியில் புதிதாக சுவர் எழுப்பு அளவீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. விரைவில் சுவர் எழுப்பப்படும்’ என தெரிவித்துனர்….

The post விருதுநகரில் பாம்புகள் படையெடுப்பு-குடியிருப்புவாசிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Snake ,Virudhunagar ,Virudhunagar Bavali Road ,Dinakaran ,
× RELATED கிண்டி பாம்பு பண்ணையில் 3டி தொழில்நுட்ப வசதி