×

புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பை அதிகரிக்க ஆணை


சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி டிச.31 இரவு 9 மணி முதல் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என காவல் அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவிட்டுள்ளார். கடற்கரை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தனி கவனம் செலுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும். முக்கிய சாலைகளில் வாகன நெரிசலை தடுத்தல், அதிவேகமாக செல்லும் வாகனங்களை தடுத்து கண்காணிக்க வேண்டும். பைக் ரேஸில் ஈடுபடுவோரை தடுத்து கண்காணிக்க கண்காணிப்பு சோதனை குழுக்களை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

The post புத்தாண்டு கொண்டாட்டம் – பாதுகாப்பை அதிகரிக்க ஆணை appeared first on Dinakaran.

Tags : New Year ,Chennai ,Police Commissioner ,Arun ,New Year's Eve ,
× RELATED புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக...