×

திணறடிக்கும் கொரோனா!: தலைநகர் டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பாதிப்பு உறுதி..!!

டெல்லி: டெல்லியில் 300-க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், கர்நாடா உள்ளிட்ட மாநிலங்களில் பரவி உள்ளது. இதில், தலைநகர் டெல்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22 ஆயிரத்து 751 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முழு லாக்டவுன் கிடையாது என்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். இந்நிலையில், டெல்லி காவல்துறை தலைமை அலுவலகம் உள்பட அங்குள்ள அனைத்து பிரிவு காவல் நிலையங்களிலும் ஏராளமான காவல் பணியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல்துறை மக்கள் தொடர்பு அதிகாரி, கூடுதல் ஆணையர் உட்பட 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. டெல்லியில் கொரோனா இரண்டாம் அலையின் போது அதாவது கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் ஏற்பட்ட தொற்று பாதிப்பை காட்டிலும் தற்போது தொற்று பாதிப்பு வேகமாக பரவி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன….

The post திணறடிக்கும் கொரோனா!: தலைநகர் டெல்லியில் 300க்கும் மேற்பட்ட காவலர்களுக்கு பாதிப்பு உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,health ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...