×

வீடு, வீடாக சென்று கும்பல் நூதன மோசடி குலுக்கலில் ₹2 லட்சம் மதிப்பு பொருட்கள் பரிசு விழுந்ததாக ₹25 ஆயிரம் அபேஸ்-சித்தூரில் பரபரப்பு

சித்தூர் :  சித்தூர் 2வது காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மல்லிகார்ஜூனா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: சித்தூர் அடுத்த பழைய பிரசாந்த் நகரை சேர்ந்தவர் நவீனா(31). இவர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எங்கள் பகுதியில் 2 பேர் மலிவு விலையில் தரமான துணி துவைக்கும் சோப் விற்பதாக கூறி வீட்டுக்கு வந்தனர். ₹100க்கு 5 சோப்புகள் மலிவு விலையில் விற்பதாக தெரிவித்தனர்.இதனால், நானும் ₹100 கொடுத்து மலிவு விலையில் 5 சோப்புகள் பெற்றேன்.  பிறகு, குலுக்கல் முறையில் சீட் விழுந்தால் பரிசு பொருட்கள் கிடைக்கும் என தெரிவித்தனர் இதனால், அவர்கள் முன்னிலையில் குலுக்கல் சீட்டை பிரித்து பார்த்தேன். அதில் விலை உயர்ந்த பைக், வாஷிங் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் தோசை தவா என 5 பொருட்கள் குலுக்கல் முறையில் விழுந்ததை பார்த்து ஆச்சரியடைந்தேன்.  அவர்கள் இருவரும் உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது. இந்த பொருட்கள் மிக விரைவில் வீடு தேடி வரும் என எனது செல்போன் நம்பர் மற்றும் வீட்டு முகவரியை பெற்றுக்கொண்டு சென்றனர். 3 நாட்களுக்கு எனது செல்போனுக்கு அழைப்பு வந்தது. அதில், உங்களுக்கு விலை உயர்ந்த ₹2 லட்சம் மதிப்பிலான 5 பரிசு பொருட்கள் கிடைத்துள்ளன. அவை பெற வேண்டுமென்றால் நீங்கள் வங்கி கணக்கில் ₹25 ஆயிரம் செலுத்த வேண்டும் என தெரிவித்தனர். இதையடுத்து, நானும் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கில் ₹25 ஆயிரம் செலுத்தினேன். ஆனால், எனது முகவரிக்கு பரிசு பொருட்கள் வரவில்லை. இதனால், சந்தேகமடைந்து அவர்கள் எனக்கு செய்த நம்பருக்கு தொடர்பு கொண்டேன். அப்போது, போன் சுவிட்ச் ஆப் என வந்தது. இதுகுறித்து நவீனா 2வது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதேபோல், லெனின் நகர் காலனியை சேர்ந்தவர் தீபக் என்பவர் துணி துவைக்கும் சோப்பு வாங்கினால் பரிசு பொருட்கள் விழும் என மோசடி செய்து தன்னிடம் இருந்து ₹18 ஆயிரம் மோசடி செய்ததாக புகார் அளித்தார். இந்த புகார்கள் மீது வழக்குப்பதிந்து மொபைல் எண்ணை பதிவு செய்து குற்றவாளிகள் யார்? என விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் மோசடி செய்த இருவரையும் கைது செய்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.வதந்திகளை நம்ப வேண்டாம்இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘பொதுமக்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பரிசு பொருட்கள் விழுவதாக செய்திகளை பரப்பினால் உடனே அந்தந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும், வதந்திகளை நம்ப வேண்டாம்’ என தெரிவித்துள்ளனர்….

The post வீடு, வீடாக சென்று கும்பல் நூதன மோசடி குலுக்கலில் ₹2 லட்சம் மதிப்பு பொருட்கள் பரிசு விழுந்ததாக ₹25 ஆயிரம் அபேஸ்-சித்தூரில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Abez-Chittoor ,Chittoor ,Sub-Inspector ,Mallikarjuna ,Prasanth ,Abes ,
× RELATED உடல் உஷ்ணம் அதிகரித்து மூளை...