×

அஜர்பைஜான் விமானம் மீது தாக்குதல்: ரஷ்யாவுக்கு திடீர் தடை

பாகு: அஜர்பைஜான் விமானம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக ரஷ்யா நகரங்களுக்கு விமானம் இயக்க அஜர்பைஜான் நிறுவனம் தடை விதித்துள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் 67 பயணிகளுடன் பாகுவில் இருந்து ரஷ்யாவின் குரோஸ்னி நகருக்கு சென்றபோது அண்டை நாடான கஜகஸ்தானின் அக்தாவ் நகரின் விமான நிலையத்திற்கு 3 கிமீ முன்பாக தரையில் மோதி வெடித்துச் சிதறியது. இதில் 38 பயணிகள் பலியாகினர். 29 பேர் காயத்துடன் மீட்கப்பட்டனர். விமானம் விபத்துக்குள்ளாவதற்கு முன்பாக, உக்ரைன் டிரோன்கள் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் தாக்குதல் நடத்தி உள்ளன. அதனால் ரஷ்ய வான் பரப்பில் பறந்த அஜர்பைஜான் விமானத்தை உக்ரைன் டிரோன் என கருதி ரஷ்யாவின் வான் எதிர்ப்பு ஏவுகணைகள் ஏவி தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் ரஷ்யாவில் உள்ள 10 விமான நிலையங்களுக்கு விமான சேவையை அஜர்பைஜான் நிறுவனம் நேற்று நிறுத்தி விட்டது.

The post அஜர்பைஜான் விமானம் மீது தாக்குதல்: ரஷ்யாவுக்கு திடீர் தடை appeared first on Dinakaran.

Tags : Baku ,Azerbaijan ,Russia ,Azerbaijan Airlines ,Kroznyj ,Kazakhstan ,Aktau ,Attack ,Dinakaran ,
× RELATED ரஷ்யா மீது அஜர்பைஜான் அதிபர்...