×

தென்கொரியாவில் பொறுப்பு அதிபர் ஹான் டக் சூவும் நீக்கம்

சியோல்: தென்கொரியாவில் அதிபர் யூன் சுக் இயோல் திடீரென ராணுவ அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதற்கு பொதுமக்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் காரணமாக அவர் தனது அறிவிப்பை திரும்ப பெற்றார். இதனை தொடர்ந்து அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானத்தை முன்மொழிந்தன. தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ஆளும் கட்சி உறுப்பினர்கள் புறக்கணித்தனர். எனினும் பெரும்பான்மை உறுப்பினர்கள் பதவி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அதிபர் யூன் சுக் இயோல் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பொறுப்பு அதிபராக பிரதமர் ஹான் டக் சூ நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவருக்கு எதிராகவும் எதிர்க்கட்சிகள் பதவி நீக்க தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தன. இதனையடுத்து நடந்த வாக்கெடுப்பில் பதவி நீக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 192-0 வாக்குகள் பதிவானது. அதிகபட்ச ஆதரவை பெற்றதால் பொறுப்பு அதிபர் ஹான் டக் சூவும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post தென்கொரியாவில் பொறுப்பு அதிபர் ஹான் டக் சூவும் நீக்கம் appeared first on Dinakaran.

Tags : President Han Tuk-soo ,South Korea ,Seoul ,President ,Yoon Suk-yeol ,Dinakaran ,
× RELATED அனைத்து போயிங் விமானங்கள் ஆய்வு: தென் கொரியா முடிவு