×

வீட்டுக்குள் மா கோலங்கள்!

நன்றி குங்குமம் தோழி

மாக்கோலங்களை வீட்டுக்குள்தான் போட முடியும். வாசலில் போட முடியாது. எப்படி அழகாக மாக்கோலம் போடலாம் என்று பார்ப்போம்…

*பச்சரிசியை அரைக்கும் போது அதனுடன் சோற்று கஞ்சி கலந்தால் கோலம்
அழகாக பளிச்சிடும்.

*பச்சரிசியை ஊறவைத்து அரைத்து (கெட்டியாக) தட்டு அல்லது தாம்பாளத்தில் கொட்டிக் காயவைத்துப் பொடித்து வைத்துக் கொண்டால் தேவைப்படும் போது நீரில் கரைத்து அழகான கோலம் போடலாம்.

*மாவுக் கோலம் போட்டு, காய்ந்த பின்பு செம்மண் பூச வேண்டும்.

*பச்சரிசி மாவுடன் சிறிது ஒயிட் கம் அல்லது ஃபெவிக்கால் கலந்து விட்டால் பல மணி நேரம் அழியாமல் இருக்கும்.

*அரைத்த பச்சரிசி மாவுடன் சிறிது மைதாமாவையும் கலந்து மாக்கோலம் போட்டால் சீக்கிரம் அழியாது. பளிச் சென்றும் வரும்.

*வீட்டுக்கூடம், வராந்தா, மொட்டை மாடி போன்ற இடங்களில் மாவுக் கோலம் போடலாம்.

தொகுப்பு: ஆர்.பத்மப்ரியா, திருச்சி.

The post வீட்டுக்குள் மா கோலங்கள்! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dinakaran ,
× RELATED கர்ப்பகால புற்றுநோய் அறிவோம்!