- இந்தியா
- ஜெய்ப்பூர்
- இந்தியா –
- பாகிஸ்தான் எல்லை
- கேசர் சிங்பூர்
- கங்காநகர் மாவட்டம்
- ராஜஸ்தான்
- எல்லை பாதுகாப்பு படை…
- தின மலர்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கங்காநகர் மாவட்டத்தில் கேசரிசிங்பூர் கிராமத்துக்கு அருகே இந்தியா – பாகிஸ்தான் எல்லைப்பகுதி அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த எல்லை வழியாக மர்ம நபர் ஒருவர் ஊடுருவ முயன்றுள்ளார். அவரை எல்லை பாதுகாப்பு படையினர் பலமுறை தொடர்ந்து எச்சரித்தும் அந்த சந்தேக நபர் ஊடுருவ முயன்றார். இதையடுத்து கண்காணிப்பு பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் சந்தேக நபரை சுட்டு கொன்றனர். மேலும் அவரிடம் இருந்து பாகிஸ்தான் நாட்டின் ரூபாய் நோட்டுகள், சிகரெட் பாக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை எல்லை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.
The post இந்தியா – பாக். எல்லையில் ஊடுருவிய நபர் சுட்டு கொலை appeared first on Dinakaran.