- மேட்டுப்பாளையம்
- சமன்னா தண்ணீர் தொட்டி
- சத்தியமூர்த்தி நகர், மேட்டுப்பாளையம்
- எஸ்ஐ ஆனந்தகுமார்
- தின மலர்
மேட்டுப்பாளையம், டிச.25: மேட்டுப்பாளையம் சத்தியமூர்த்தி நகர் சாமண்ணா வாட்டர் டேங்க் அருகே சட்டவிரோதமாக மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்ஐ ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். அப்போது, அங்கு சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த மூவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மூவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் ஜடையம்பாளையம் சக்தி நகரை சேர்ந்த ஆசாத்(34), மகாதேவபுரம் முதல் வீதியை சேர்ந்த முகமது ரபி(37), எஸ்.எம்.நகர் பகுதியை சேர்ந்த வாசிம் அக்ரம்(36) என்பதும், சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட மூன்று நம்பர் லாட்டரி சீட்டுகளை மொபைல் போனில் வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து இரு செல்போன்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.2000 ஐ பறிமுதல் செய்தனர். பின்னர், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
The post லாட்டரி விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.