×

ஊழல் குற்றச்சாட்டு வழக்கு செபி தலைவர் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்: ஜன.28ம் தேதி விசாரணை

புதுடெல்லி: ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் செபி தலைவர் மாதபி பூரி புச் மற்றும் மனுதாரரான திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா ஆகியோர் வரும் ஜனவரி 28ம் தேதி ஆஜராக லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியது. அதானி குழுமம் பங்குச்சந்தையில் செய்த முறைகேட்டிற்கும், இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரிய (செபி) தலைவர் மாதபி பூரி புச்சுக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்காவின் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.

இந்த விவகாரத்தில் மாதபி புச் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கிடையே, செபி தலைவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோர் லோக்பால் அமைப்பில் மனுதாக்கல் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த வரும் ஜனவரி 28ம் தேதி செபி தலைவரும், மனுதாரர் மஹுவா மொய்த்ரா உள்ளிட்டோரும் ஆஜராக லோக்பால் நேற்று நோட்டீஸ் விடுத்துள்ளது.

The post ஊழல் குற்றச்சாட்டு வழக்கு செபி தலைவர் ஆஜராக லோக்பால் நோட்டீஸ்: ஜன.28ம் தேதி விசாரணை appeared first on Dinakaran.

Tags : Lokpal ,SEBI ,New Delhi ,Madhabi Puri Buch ,Trinamool Congress ,Mahua Moitra ,Adani Group ,Dinakaran ,
× RELATED செபி தலைவர் மாதபி புரி புச்சிடம்...