×

ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் காலமானார்

கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வந்த ஹாலிவுட் நடிகர் சிட்னி போய்ட்டியர் (94) காலமானார். கருப்பினத்தை சேர்ந்த இவர், 1950 முதல் 1960 வரை சிறந்த கேரக்டர்களில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளார். அமெரிக்கா, பஹாமாஸ் ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்றிருந்த இவர், பனாமா தீவை சேர்ந்த தக்காளி விவசாயியின் மகனாவார். 1958ல் ஆஸ்கர் விருதை வெல்வதற்கான போட்டியில், ‘தி டிஃபையன்ட் ஒன்ஸ்’ படத்துக்காக சிட்னி போய்ட்டியரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ‘லில்லிஸ் ஆஃப் தி ஃபீல்ட்’ படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்றார். இதன்மூலம் ஆஸ்கர் விருது வென்ற முதல் கருப்பின நடிகர் என்ற பெருமையை பெற்றார். 2009ல் அன்றைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமெரிக்க நாட்டின் உயரிய விருது கொடுத்து கவுரவித்தார். சிட்னி போய்ட்டியர் மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

The post ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் காலமானார் appeared first on Dinakaran.

Tags : Hollywood ,California ,Sidney Poitier ,California, USA ,
× RELATED ரேசர் இயக்குனரின் கேங்ஸ்டர் படம்