நன்றி குங்குமம் தோழி
கிறிஸ்துமஸுக்கு ஆயத்தமாதல் (advent) நிகழ்வு இந்த மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிவிட்டது. அன்றிலிருந்து ஐந்து வாரங்களுக்கு ஸ்டார் தொங்கவிடுவது, குடில் அமைப்பது, கிறிஸ்துமஸ் மரங்களை செட் செய்வது, கிறிஸ்து பிறப்பு தொடர்பான விஷயங்களை (nativity) அலங்கரிப்பது, கலர் கலராக சீரியல் விளக்குகளை செட் செய்வதென வீடுகளையும், தேவாலயங்களையும் அலங்கரிக்கும் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. கூடவே கிறிஸ்துமஸ் தாத்தா (santaclaus) பரிசுப் பொருட்களோடு குழந்தைகளைச் சந்தித்து குதூகலப்படுத்தும் நிகழ்ச்சிகளும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன.
கடந்த 25 ஆண்டுகளாக கிறிஸ்டியன் ப்ரைடல் வெட்டிங் கவுன் விற்பனையில் தனக்கென தனித்துவத்துடன் கால்பதித்த மேரி ஆன் லதா, இந்த ஆண்டு முதல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கான டெக்கரேஷன் பொருட்களையும், அதே தனித்துவத்துடன் “ஷாப் கிறிஸ்துமஸ்” என்கிற பெயரில் தனது விற்பனையை தொடங்கி இருக்கிறார். கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருள் விற்பனை குறித்து அவரிடம் பேசியதில்…‘‘சின்ன வயதில் இருந்தே இந்தக் கொண்டாட்டங்களுக்கு நான் பழக்கப்பட்டவள் என்பதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக மட்டுமே யுனிக்கான கடை ஒன்றைத் தொடங்க வேண்டும் என்கிற நீண்டநாள் கனவு இந்த வருடம்தான் கை கூடியது.
அழகு என்பது என் மைன்டில் ஊறிப்போன விஷயம். கிறிஸ்துமஸ் டெக்கரேஷனுக்கு எவையெல்லாம் அழகூட்டும் என்பதும் எனக்கு அத்துபடி. கூடவே வாடிக்கையாளரை எது நன்றாக ரீச்
செய்யும் என்கிற பல்ஸ் நன்றாகவே எனக்குத் தெரியும். எனவே, சீன நாட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கென மொத்தப் பொருட்கள் விற்பனை செய்கிற மார்க்கெட்டிற்குள் நுழைந்தபோது, அந்த மார்க்கெட் முழுவதுமே திரும்பும் திசையெங்கும் குறைந்தது 2000 ஆயிரம் கடைகளாவது அங்கிருந்தது. உலக நாடுகளுக்கே சப்ளை செய்கிற மிகப்பெரிய மார்க்கெட் என்பதால், கிறிஸ்துமஸ் ஆர்டர்களை மார்ச், ஏப்ரல் மாதத்திலேயே கொடுத்துவிட வேண்டும்.
காஞ்சிபுரத்திற்கு சென்று பட்டு எடுப்பது மாதிரிதான். பல்வேறு பட்டு வியாபாரிகள் இருந்தாலும் எது தரமானது, எது யுனிக்கானது என தேர்ந்தெடுத்து வாங்குகிற மாதிரி, கிறிஸ்துமஸ் அயிட்டங்களை சீன மார்க்கெட்டில் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு ரொம்பவே மெனக்கெட்டோம். காரணம், சீப்பான மெட்டீரியலும் அங்கு கிடைப்பதுதான்.2 முதல் 3 நாட்கள் மார்க்கெட்டை பலமுறை சுற்றி வந்து சர்வே எடுத்த பிறகே, எது பெஸ்ட் எனத் தேர்ந்தெடுத்து, குவாலிட்டி மற்றும் யுனிக்னெஸ் பார்த்து பொருட்களை தேடிக் கண்டுபிடித்து வாங்கும் வேலைகளில் இறங்கினோம்’’ என்றவர், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக சீனாவில் இருந்து இறக்குமதி செய்துள்ள பொருட்களை காண்பித்தவாறே விளக்க ஆரம்பித்தார்.
‘‘4 அடியில் தொடங்கி 9 அடி வரை 7 விதமான கிறிஸ்துமஸ் ட்ரீ, டேபிள் டாப் ட்ரீஸ், டெஸ்க்டாப் பாட் ட்ரீஸ் இவற்றுடன் கண்ணைப் பறிக்கின்ற ஆர்னமென்ட்களையும் கலர் கலராக வெரைட்டி வெரைட்டியாக இறக்குமதி செய்துள்ளோம்’’ என புன்னகைத்தபடியே காண்பிக்கத் தொடங்கினார்.‘‘அழகழகான க்யூட்டான மினியேச்சர் சாண்டாக்ளாஸ், சாண்டா வித் கிஃப்ட் பாக்ஸ், சாண்டா வித் டீலைட் லேம்ப், வின்டேஜ் கிஃப்ட் பாக்ஸ், சாஃப்ட் டாய்ஸ், கேன்டி கேன், யுனிக் பிகரியன்ஸ் (figurienes), ட்ரீ பாப்பிள்ஸ் (bobbles), ட்ரீ கார்லென்ட்ஸ், ட்ரீ ஹேங்கிஸ், வால் ஹேங்கிஸ், டோர் ஹேங்கிஸ், கிளிட்டரிங் பால்ஸ், மெட்டல் பெல்ஸ், கலர்ஃபுல் பேப்பர் ஸ்டார்ஸ், மெட்டல் ஸ்டார்ஸ், டியர்ஸ், கிறிஸ்து பிறப்பை சொல்லும் செட்ஸ் (cribs), வைப்ரன்ட் கலரில் ப்ரோக்கன் ஹார்ட் சீரியல் லைட்ஸ், கிறிஸ்துமஸ் ரீத் வித் லைட், செராமிக் டாய்ஸ், ஷோ பீஸஸ் போன்றவையும் சீனாவில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.
கஸ்டமர் சேட்டிஸ்பேக்ஷன் மூலம் வரும் ரீச்தான் எங்களுக்கு அதிகம். ஒவ்வொரு கஸ்டமர் மூலமாக பலர் எங்கள் வாடிக்கையாளர்களாக மாறியிருக்கிறார்கள்’’ என்கிறவர், ‘‘அந்த அளவுக்கு எங்கள் பொருளின் தரம் மற்றும் யுனிக்னெஸ் சிறப்பாக இருக்கின்றது. எல்லாவற்றிலுமே வாடிக்கையாளர் ஒரு வித்தியாசத்தை எங்கள் கலெக்ஷனில் உணர்கிறார்கள்.
நாங்கள் எதிர் பார்த்ததைவிட வேகமாகவே பொருட்கள் விற்பனையாகிறது.
கிறிஸ்துமஸ் நெருங்க நெருங்க வாடிக்கையாளர் கூட்டம் இன்னும் அதிகரிக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்தவர், ‘‘ஒருமுறை கிறிஸ்துமஸ் ட்ரீ வாங்கினால் அது பத்து முதல் 15 ஆண்டுகளுக்கு நன்றாகவே உழைக்கும். கிறிஸ்துமஸ் ட்ரீயில் வருகிற கான்செப்டை மட்டுமே பிடித்த மாதிரியாக மாற்றுவார்கள். அதாவது, ட்ரீ முழுவதும் கோல்ட் அல்லது ரெட் அல்லது க்ரீன், மெரூன் அண்ட் வொயிட், பிங்க் வித் சில்வர் கலர் என தீம் கான்செப்டை மாற்றுவார்கள்.
அடுத்த ஆண்டு கிறிஸ்துமஸுக்கு இப்போதிருக்கும் கலர் தவிர்த்து, இதைவிட அதிகமானவற்றைக் கொண்டு வரும் எண்ணம் இருக்கிறது’’ என்றவர், ‘‘குவாலிட்டி மற்றும் யுனிக்னெஸ் பார்த்து பொருள் வாங்க நினைப்பவர்கள் எங்கிருந்தாலும் எங்கள் கடையை தேடி கண்டுபிடிக்கிறார்கள்’’ என்கிறார் நம்பிக்கை மாறாமல்.டிசம்பர் மாதத்தில் களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில், அதற்கான பொருட்களை மினி பாரடைஸாக, யுனிக், எலிகன்ட், க்ளாசிக் கலெக் ஷனுடன் ஸ்பார்க்ளிங் கிறிஸ்துமஸாக முழுக்க முழுக்க தன் தொழிலை நகர்த்த தொடங்கியிருக்கிறார் மேரி ஆன் லதா. தனது காலை அழுத்தமாகவே இத்துறையில் பதிவு செய்திருக்கிறார்.
தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்
படங்கள்: ஆ.வின்சென்ட் பால்
The post Sparkling Christmas… appeared first on Dinakaran.