×

திருத்தணியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடம்: ஜெகத்ரட்சகன் எம்பி ஆய்வு

திருத்தணி: திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தி கடந்த 2021ம் ஆண்டு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். தலைமை மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளுக்கு முதலமைச்சரின் சிறப்பு நிதியிலிருந்து ₹45 கோடி மதிப்பீட்டில் 4 அடுக்குமாடிகள் கொண்ட புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தின் திறப்பு விழா விரைவில் நடைபெற உள்ள நிலையில், எஸ் ஜெகத்ரட்சகன் எம்பி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 215 கூடுதல் படுக்கைகள் வசதி மற்றும் அனைத்து விதமான ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த வங்கி உள்ளிட்ட அதிநவீன வசதிகள் மாவட்ட தலைமை மருத்துவமனையில் செயல்பட உள்ளதாகவும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்கள் நிரப்பப்படுவதால் 24 மணி நேரம் உயர்ந்த மருத்துவ சேவை பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றும் திருவள்ளூர், சென்னை போன்ற நகரங்களுக்கு மருத்துவ சிகிச்சை பெற செல்ல வேண்டிய நிலை இனி வரும் காலங்களில் ஏற்படாது என்று ஜெகத்ரட்சகன் எம்பி தெரிவித்தார்.

எஸ்.சந்திரன் எம்எல்ஏ, பொதுப்பணித்துறை மேற்பார்வை செயற்பொறியாளர் தேவன் உதவி செயற்பொறியாளர் முரளி, தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.பூபதி, மருத்துவ அலுவலர் ராதிகா தவி, நகர திமுக செயலாளர் வினோத்குமார், திமுக நிர்வாகிகள் கணேசன், ஷியாம் சுந்தர், அசோக் குமார், பிரதாப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருத்தணியில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடம்: ஜெகத்ரட்சகன் எம்பி ஆய்வு appeared first on Dinakaran.

Tags : District ,Head Hospital ,Tiruttani ,Jagadrakshagan ,Chief Minister ,M.K. Stalin ,2021 ,Legislative Assembly ,Tiruttani Government Hospital ,Tiruvallur district ,District Head Hospital ,Dinakaran ,
× RELATED திருத்தணியில் ரூ.45 கோடியில் தரம்...