- பல்லாவரம்
- ஞானமணி
- மாசிலாமணி தெரு, விநாயக நகர், பொழிச்சலூர்
- பஞ்சாயத்து
- ஜனாதிபதி
- போசிச்சநல்லூர்
- சரவணன்
- அகத்தீஸ்வரர் கோவில்
பல்லாவரம்: பொழிச்சலூர், விநாயகா நகர், மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஞானமணி. பொழிச்சலூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மகன் சரவணன் (35), மாற்றுத்திறனாளி. இவர் நேற்று முன்தினம் மாலை, அதே பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற அகத்தீஸ்வரர் கோயிலுக்குள் சென்றுள்ளார். அங்கு இருந்த பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜாவின் மகன் தினேஷ் பாபு (35) என்பவருக்கும், சரவணனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்டனர். தகவல் அறிந்ததும் சங்கர்நகர் போலீசார் வந்து தகராறில் ஈடுபட்ட தினேஷின் நண்பர் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். தப்பிச்சென்ற தினேஷ்பாபுவை தேடி வருகின்றனர். இவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. சங்கர் நகர் காவல் நிலையத்தில் முன்னாள் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, அகத்தீஸ்வரர் கோயில் பல ஆண்டுகளாக தனியார் வசம் இருந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, கடந்த ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. கடந்த சில மாதங்களாக கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் நன்கொடை, எண்ணெய், நெய் மற்றும் சிதறு தேங்காய் ஆகியவற்றை உரிமை கொண்டாடுவது தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த 3 குழுக்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இந்த மோதல் நடந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கோயில் உள்ளே இருவர் மாறிமாறி தாக்கிக்கொள்ளும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
The post கோயில் நன்கொடை தகராறு மாற்றுத்திறனாளி மீது சரமாரி தாக்குதல் appeared first on Dinakaran.