×

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்

சென்னை : சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரியது தமிழ்நாடு அரசு. இலுப்பைக்குடி, அரசனூர் கிராமங்களில் 775 ஏக்கரில் ரூ.342 கோடியில் சிப்காட் தொழிற்பூங்கா அமைய உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் அமையும் சிப்காட் தொழிற்பூங்கா மூலம் 36,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஆட்டோ மொபைல் உதிரி பாகங்கள், ஜவுளி உள்ளிட்ட துறைகள் சார்ந்த தொழிற்சாலைகள் சிப்காட்டில் அமைய உள்ளது.

The post சிவகங்கை மாவட்டத்தில் ரூ.342 கோடியில் அமையும் சிப்காட் தொழிற் பூங்காவுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம் appeared first on Dinakaran.

Tags : SIPCOT Industrial Park ,Sivaganga district ,Chennai ,Tamil Nadu government ,SIPCOT ,Industrial Park ,Iluppaikudi ,Arasanur ,Sivaganga district… ,Dinakaran ,
× RELATED பண்ணைக்குட்டைகள் அமைக்க வலியுறுத்தல்