×

கிறிஸ்துமஸ் கேக்

தேவையானவை:

மைதா – 300 கிராம்,
பேக்கிங் பவுடர் – 3 டீஸ்பூன்,
சோடா உப்பு – ½ டீஸ்பூன்,
வெண்ணெய் – 200 கிராம்,
கேக் மசாலா – 1 டீஸ்பூன்,
கோக்கோ – 1 டீஸ்பூன்,
பால் – 100 மில்லி லிட்டர்,
முட்டை – 3,
செர்ரி – 50 கிராம்,
பொடித்த சர்க்கரை – 250 கிராம்,
முந்திரி, திராட்சை, பிஸ்தா, வெனிலா எசென்ஸ் – சில துளிகள்.

செய்முறை:

முதலில் சல்லடையில் மைதா, பேக்கிங் சோடா, சோடா உப்பு, கேக் மசாலா இவைகளை ஒன்றாகக் கலந்து 3 முறை சலிக்கவும். பொடித்தச் சர்க்கரையுடன் வெண்ணெய் சேர்த்து நன்குக் குழைக்கவும். முட்டைகளை நுரைக்க அடிக்கவும். குழைத்த கலவையுடன் அடித்த முட்டைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இவற்றில் கோக்கோ, பால், கேரமல் சர்க்கரை, எசென்ஸ் சேர்த்துக் கலக்கவும். கடைசியாக மாவு தூவிய செர்ரி பழங்கள், உலர் திராட்சை, முந்திரிச் சேர்த்து பேக்கிங் டிரேயில் ஊற்றி ஓவனில் வைத்துப் பேக் செய்யவும். வெந்ததும் வெளியில் எடுத்து விரும்பியபடி ஐசிங் அலங்காரம் செய்து கொள்ளலாம்.

The post கிறிஸ்துமஸ் கேக் appeared first on Dinakaran.

Tags : Christmas ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள்!!