×

பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. மனு: மலிவான விளம்பரம் என காங்கிரஸ் கண்டனம்

டெல்லி: வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தியின் வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இது மலிவான விளம்பரம் என காங்கிரஸ் விமர்சித்து உள்ளது. வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் திருமதி. பிரியங்கா காந்தி, வெற்றி பெற்றதை எதிர்த்து பாஜக வேட்பாளர் செல்வி. நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள நிலையில், இது மலிவான விளம்பரம் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு கடந்த மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதன் முறையாக போட்டியிட்ட திருமதி. பிரியங்கா காந்தி 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இந்நிலையில், திருமதி. பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவில் அவருடைய மற்றும் குடும்ப சொத்து விவரங்களை சரியாக குறிப்பிடவில்லை. மேலும், தவறான தகவலை வழங்கியுள்ளார். இது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. அத்துடன் ஊழல் நடவடிக்கைக்கு சமமானது ஆகும். இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என வயநாட்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட செல்வி. நவ்யா ஹரிதாஸ் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். திருமதி. பிரியங்கா காந்தி தனது வேட்பு மனுவில் சொத்து விவரங்களை சரியாக குறிப்பிடவில்லை என தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தேன். ஆனால் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரமோத் திவாரி, நவ்யா ஹரிதாஸ் மலிவான விளம்பரத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். அவரது மனு நிராகரிக்கப்படுவதுடன், நீதிமன்றம் அவருக்கு அபராதம் விதிக்கும் என்றும் கூறியுள்ளார். சோனியா காந்தியின் குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு தொடர்வது பாஜக-வுக்கு வாடிக்கையாகி விட்டதாக கண்டனம் தெரிவித்துள்ள விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் பக்கமே உண்மை இருப்பது நீதிமன்றத்தில் தெளிவாகும் என கூறியுள்ளார்.

The post பிரியங்கா காந்தியின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. மனு: மலிவான விளம்பரம் என காங்கிரஸ் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Priyanka Gandhi ,J. K. ,Congress ,Delhi ,BJP ,Nawya Haridas ,Kerala High Court ,Wayanadu ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரமாண பத்திரத்தில் தவறான...