மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திடீர் காற்றோடு மழை பொழியும் வானிலை உள்ளதை குறிக்கும் வகையில் 7 துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடதமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 35 முதல் 45 கி.மீ. இடையிடையே 55 கி.மீ. வேகத்தில் வீசும் என்றும் கூறப்படுகிறது.
The post ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு! appeared first on Dinakaran.