×

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிராகரிப்பு

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகளின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக அவரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் 471 நாள் சிறைக்கு பிறகு செந்தில் பாலாஜி்க்கு உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே பாலாஜி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சராக பதவியில் இல்லை என கூறி ஜாமீன்பெற்ற செந்தில் பாலாஜி, தற்போதுஅமைச்சராக பதவியில் உள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீனில் வெளியே வந்தவுடன் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. எனவே, செந்தில் பாலாஜியின் ஜாமீனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த பிழையும் இல்லை எனக் கூறி சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

The post அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனு நிராகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Minister ,Sendil Balaji ,Delhi ,Dinakaran ,
× RELATED நாடு முழுவதும் மருத்துவர்கள்...