- பவானி
- ஈரோடு
- ஈரோடு மாவட்டம்
- பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடம் ஏலம்
- கவுந்தப்பாடி
- சத்தியமங்கலம்
- கோபி?. திருக்குறள்
- அந்தியூர்
- மேட்டுப்பாளையம்
- நாமக்கல்
- கள்ளக்குறிச்சி…
- பவானி ஒழுங்குபடுத்தப்பட்டது
- விற்பனை கூடம் ஏலம்
ஈரோடு,டிச.21: ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க, பவானி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று பாக்கு ஏலம் தொடங்கப்பட்டது. இந்த மறைமுக ஏலத்தில் பவானி, கவுந்தப்பாடி, சத்தியமங்கலம், கோபி, அந்தியூர்,மேட்டுப்பாளையம்,நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பாக்கு காய்கள்,பாக்கு பழம்,பாக்கு கொட்டைகள் மற்றும் ஆப்பி எனப்படும் பாக்கு வகைகளை ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர்.
15க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இந்த ஏலத்தில் பங்கேற்றனர். இதில்,ஆப்பி வகை பாக்கு முதல் தரம் கிலோ ரூ.420, 2வது தரம் கிலோ ரூ.230 முதல் ரூ.260 வரையிலும், பாக்கு பழங்கள் கிலோ ரூ.60 முதல் ரூ.100 வரையிலும் விலைபோயின. மொத்த விற்பனை மதிப்பு ரூ.13 ஆயிரத்து 630 ஆகும். இந்த ஏலத்துக்கான துவக்க நிகழ்ச்சியில் ஈரோடு விற்பனைக் குழுவின் தனி அலுவலர் நாசர், ஈரோடு விற்பனைக் குழுவின் வேளாண்மை துணை இயக்குநர் சாவித்திரி,கோபி வேளாண்மை அறிவியல் நிறுவன விஞ்ஞானி அழகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
The post பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பாக்கு ஏலம் தொடக்கம் appeared first on Dinakaran.