- சீமான்
- நாதக
- கிருஷ்ணகிரி மாவட்டம்
- கிருஷ்ணகிரி
- நாதம் தமிழர் கட்சி
- நத்தக்கா கிழக்கு ஒன்றியம்
- சூர்யா
- தின மலர்
கிருஷ்ணகிரி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடவடிக்கையை கண்டித்து, பல்வேறு மாவட்டங்களில் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரியில் நாதக கிழக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் நாதகவில் கடந்த 10 ஆண்டுகளாக குடும்பம், குழந்தைகளை விட்டு இரவு, பகல் பாராமல் கட்சிக்காக உழைத்தோம்.
ஆனால், ஒருங்கிணைப்பாளர் சீமான், எங்களை எச்சில் என்று கூறுகிறார். அவர் வந்தால், அவருக்காக கொடி கம்பம் நடுவது, போஸ்டர் ஒட்டுவது, ரூம் போடுவது, சாப்பாடு என அனைத்தையும் நாங்கள் செய்வோம். ஆனால் எங்களை எச்சில் என்று கூறுகிறார். மாற்றுக்கட்சியில் இருந்து பலர் வந்துள்ளனர். அவர்கள் எல்லாம் எச்சில் இலையா?.
பல ஆண்டுகளாக கட்சி பணி செய்து, பதவி உயர்வு கேட்டால், நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும். நாங்கள் என்ன சொல்கிறோமோ, அதை மட்டும் தான் நீங்கள் செய்ய வேண்டும் என்கிறார். எனவே, நான் உள்பட இக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
The post எங்களை எச்சில் என்று சீமான் திட்டுவதா? கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாதக நிர்வாகிகள் விலகல் appeared first on Dinakaran.