×

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று சரிவு

அண்ணா நகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு பூக்களின் வரத்து குறைந்ததால் விலை 4 மடங்கு உயர்ந்தது. வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர். அதே நேரத்தில் நேற்று புறநகர் சில்லறை வியாபாரிகள், அனைத்து பூக்களையும் வாங்கி சென்றனர். அவைகள், சரியாக விற்பனையாகவில்லை. அதனால் கோயம்பேடு மார்க்ெகட்டுக்கு புறநகர் வியாபாரிகள் வருகை இன்று குறைந்தது. மேலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பூக்களின் விலை இன்று சற்று குறைந்துள்ளது. ஒரு கிலோ மல்லி 2500 ரூபாயிலிருந்து 2,300க்கும், ஐஸ் மல்லி 2,300ல் இருந்து 1,800க்கும், முல்லை 750க்கும், ஜாதி 600க்கும், கனகாம்பரம் 800க்கும், அரளி 400க்கும், சாமந்தி 100க்கும், சம்பங்கி 230ல் இருந்து 100க்கும் சாக்லேட் ரோஸ் 280ல் இருந்து 180க்கும், பன்னீர் ரோஸ் 200ல் இருந்து 120க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோயம்பேடு பூ மார்க்கெட் துணை தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘ஆந்திரா, கர்நாடகா, ஒசூர் ஆகிய மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு தொடங்கியுள்ளது. இங்கும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. நேற்று, ஏராளமான வியாபாரிகள் பூக்கள் வாங்க வந்தனர். அதனால் இன்று மார்க்கெட்டுக்கு வியாபாரிகள் வரத்து குறைந்தது. இதனால் பூக்களின் விலை சற்று குறைந்துள்ளது. இதனால் வியாபாரிகள், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சற்று சரிவு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Anna Nagar ,Chennai ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வு