×

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்கு செல்ல கொரோன தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்கு செல்ல கொரோன தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்து கொண்டிருக்கின்றனர். கோரோன்னா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.அதன்படி கொரோனா தடுப்பூசியில் 2 தவணை செலுத்தியதற்கான சான்றிதழை கையில் வைத்திருக்க வேண்டுமெனவும் ஆழ்ந்து இதற்கான குறுஞ்செய்தியை கைபேசியின் மூலம் காண்பிப்போருக்கு மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றுகள் இல்லாதவர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என மாவட்ட ஆட்சி தலைவர் ஆணை வெளியிட்டுள்ளார். இந்த கட்டுப்பாடு நாளை காலை 5:30 மணிக்கு கோவில் திறக்கப்படும் நிலையில் இருந்து அமலுக்கு வருகிறது….

The post திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்திற்கு செல்ல கொரோன தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம்: மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Annamalaiyar Temple ,District Collector Murugesh ,Tiruvannamalai ,District ,Collector ,Murugesh ,Tiruvannamalai Annamalaiyar Temple.… ,District Collector ,
× RELATED (திமலை) அண்ணாமலையார் கோயிலில்...