×

தாம்பரத்தில் அதிகாலையில் ஷட்டரை இழுத்து வளைத்து மளிகை கடையில் கொள்ளை: 4 பேருக்கு வலை

தாம்பரம்: மேற்கு தாம்பரம் – திருநீர்மலை பிரதான சாலை, ரமேஷ் நகரை சேர்ந்தவர் அழகுராஜா (31). இவர், மேற்கு தாம்பரம், கோவிந்தராஜ் தெருவில் மளிகை மொத்த விற்பனை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டியுள்ளார். அப்போது கடைக்கு மளிகை பொருட்கள் லோடு வந்துள்ளது. இதனால், அழகுராஜா மற்றும் ஊழியர்கள் அதிகாலை 1.30 மணி வரை லோடு வண்டியில் இருந்து மளிகை பொருட்களை இறக்கி வைக்கும் பணிகளில் ஈடுபட்டு, பின்னர் 1.30 மணிக்கு மேல் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை சுமார் 7 மணியளவில் அவரது கடைக்கு அருகில் வசிப்பவர்கள், அழகுராஜாவை தொடர்பு கொண்டு, கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

உடனே, அழகுராஜா கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் 5 ஷட்டர்களில் ஒரு ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.12,000 கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. தகவலறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் அதிகாலை 4.33 மணியளவில் அங்கு வந்த 4 பேர் ஷட்டர் அருகே படிக்கட்டில் அமர்வது போல் அமர்ந்து, ஷட்டரை இழுத்து வளைத்து பின்னர் அதில் ஒருவர் கடை உள்ளே நுழைந்து, கல்லாப்பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 12,000 ரூபாயை கொள்ளையடித்து செல்வது பதிவாகி இருந்தது. இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

The post தாம்பரத்தில் அதிகாலையில் ஷட்டரை இழுத்து வளைத்து மளிகை கடையில் கொள்ளை: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Tambaram ,Azhugaraja ,Ramesh Nagar, West Tambaram - Thiruneermalai Main Road ,Govindaraj Street, West Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் மாநகராட்சியில் தீவிர தூய்மை பணி: மேயர் தொடங்கி வைத்தார்