×

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் திருப்போரூரில் 2வது நாளாக கலெக்டர் ஆய்வு

திருப்போரூர்: திருப்போரூரில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் 2வது நாளாக செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு செய்தார். திருப்போரூரில், உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமின் 2வது நாளான நேற்று செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் திருப்போரூர் பேருந்து நிலையம் மற்றும் அந்த வளாகத்தில் உள்ள கழிப்பறையை பார்வையிட்டார். அப்போது, கழிப்பறை மிக மோசமாக பராமரிக்கப்பட்டு வருவதை கண்டறிந்து, பேருந்து நிலையத்திற்கான அடிப்படை வசதிகளான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, மின்விளக்குகள் மற்றும் கழிவறையை சுத்தமாக பராமரித்தல் போன்ற பணிகளை உடனடியாக சரிசெய்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும் என்று பேரூராட்சி செயல் அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதனைத்தொடர்ந்து, திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசினர் பெண்கள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டு விடுதியில் உள்ள மாணவியருக்கு என்னென்ன வசதிகள் தேவைப்படுகிறது என்று மாணவியர்களிடம் கேட்டறிந்து, அவர்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ஜன்னல்களுக்கு கொசுவலை மற்றும் போட்டித்தேர்வு எழுதுவதற்கான புத்தகங்கள் உடனடியாக வாங்கி தருமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வேலாயுதம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் இதயவர்மன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், செயல் அலுவலர் சங்கீதா, ஆதிதிராவிடர் நல வட்டாட்சியர் ஜீவிதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சற்குணா, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) பானுமதி, மகளிர் திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் உதயகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் திருப்போரூரில் 2வது நாளாக கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Thiruporur ,Chengalpattu District ,Collector ,Arunraj ,Chengalpattu ,District ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் இள்ளலூர் சாலையில் இயங்கும் மதுக்கடை இடம் மாற்ற கோரிக்கை